பாவம் அந்த வைரஸ்கள் அவற்றினை அழிக்க எவ்வளவு ஏற்பாடு.........! இன்று கணனிக்கு ஒரு முதன்மையான பிரச்சினை என்றால் அது வைரஸ் ஆக தான் இருக்கும். புதுப்புது வைரஸ்களின் தோற்றத்திலும் குறைவில்லை, அதனை அழிக்க எடுக்கும் முயற்சியிலும் குறைவில்லை. நமது கணனிக்கு வைரஸ்கள் எத்தனையோ விதத்தில் வந்து சேருகின்றன அதில் பிரதானமானது தான் நாம் இணையத்திலிருந்து கோப்புக்களை Download செய்யும் போது அந்த கோப்புக்களில் வைரஸ் இருக்குமானால் அதன் மூலம் நம் கணனிக்கு வைரஸ் பரவிவிடும்.
எனவே நாம் அந்த Download Link களை ஒரு முறை சோதித்துவிட்டு Download செய்வோமானால் அந்த பிரச்சினை நமக்கு வரப்போவது இல்லை.
அது எப்படி சோதிப்பது என்கிறீர்களா......? அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது virus total எனும் தளம்.
அது மட்டுமல்லாது எமது கணனியில் ஏதாவது சந்தேகத்துக்கிடமான கோப்புக்கள் இருக்குமானால் அதனை நாம் இந்த தளத்தில் upload செய்து scan செய்யும் வசதியும் பிரதானமானது.
இந்த தளத்தில் நாம் upload செய்யும் கோப்புக்கள் 43 வகையான virus guard கள் மூலம் scan செய்யப்படுகின்றது. எனவே virus கள் தப்பிக்க வழியே இல்லை.
இந்த தளத்தில் ஆரம்பத்தில் 20Mb அளவுள்ள கோப்புக்கலையே upload செய்து சோதிக்க முடிந்தது எனினும் அது தற்போது 32Mb ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்திற்கு செல்ல கீழுள்ள சுட்டியை செடுக்கவும்.
ⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦ
FOR ENGLISH VERSION: CLICK HERE
ⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦⓦ






0 கருத்துகள்:
கருத்துரையிடுக